Wednesday, April 16, 2014

சுவையான குக்கீஸ்

சுவையான குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம்  கோதுமை மா 
  •  50  கிராம்   சீனி 
  •    1  முட்டை 
  •  50 கிராம் மாஜரீன்/பட்டர் 
  • 1/2 தே.கரண்டி  பேக்கிங் பவுடர்
  • 50 கிராம் சொக்லேட்(துண்டுகளாக்கியது)
  • 50 கிராம் கஜூ (துண்டுகளாக்கியது)

செய்முறை :

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, சீனி, முட்டை, பட்டர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பிசையவும். 
  2. ஒரு மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  3. பின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விரும்பிய வடிவங்களில் வெட்டவும்.
  4. பட்டர் பூசிய தட்டில் குக்கிகளை ஒரு அங்குல இடைவெளி விட்டு அடுக்கவும்.
  5. 325 பாகையில் சூடாக்கிய ஓவனில் 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணவும்.
  6. ஓவனிலிருந்து எடுத்த குக்கிகளை ஆற விடவும்.
  7. ஒரு பாத்திரத்தில் நீரை சூடாக்கி, அதன் மேல் இன்னொரு பாத்திரத்தை வைத்து, அதனுள் சொக்கிலேட் துண்டுகளைப் போட்டு உருகி வரும் வரை விடவும்.
  8. பின்னர் குக்கீசின் மேல் பூசவும்.
  9. கஜு துண்டுகளை குக்கிகளின் மேல் பரவவும்.
  10. பரிமாறவும்.

 


    

No comments: