Friday, April 11, 2014

ரவா லட்டு

                                               ரவா  லட்டு

தேவையான பொருட்கள்: 

ரவா  2 கப் 
சீனி   1 கப் 

பால் அல்லது ரின்மில்க் 3/4 லீற்றர் 
கஜு  10 கிராம் 
முந்திரி வற்றல் 10 கிராம் 
ஏலக்காய்  5
நெய் 200 கிராம் 

செய்முறை:

  1. வாணலியில் 100 கிராம் நெய் ஊற்றி, கஜு , முந்திரி வற்றல் இரண்டையும் பொன்னிறமாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவேண்டும்.
  2. பின் மிகுதியாகவுள்ள நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. பின் சீனியையும், ரவாவையும் நன்றாகக் கலக்க வேண்டும்.
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் ரவா, சீனி, கஜு, முந்திரி வற்றல் என்பவற்றை நன்றாகக் கலக்கவும்.
  5. டின்பாலை நன்கு சூடாக்கி ரவை கலவையினுள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி உருண்டைகளாகப் பிடிக்கவும். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி டைமன் வடிவமாகவோ அல்லது  விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.

No comments: