Friday, March 21, 2014
கரட் கேக்
Carrot Cake |
தேவையான பொருட்கள் :
- 200 கிராம் துருவிய கரட்
- 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு
- 150 கிராம் பட்டர்
- 180 கிராம் சீனி
- 50 கிராம் மா
- 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 2 தேக்கரண்டி கறுவா , ஏலக்காய், சாதிக்காய் பவுடர்.
- 2 முட்டை
-
2 கப் ஐசிங் பவுடர்
செய்முறை:
- முதலில் பட்டர், சீனி இரண்டையும் மிக்சியில் நன்றாக அடிக்கவும்.
- பின் முட்டையையும் சேர்த்து அடிக்கவும்.
- மாவையும், பேக்கிங் பவுடரையும் நன்றாக சலித்து வைக்கவும்.
- பின் துருவிய கரட், பாதாம் பருப்பு, கறுவா பவுடர் என்பவற்றைச் சேர்க்கவும். அதன் பின் பட்டர் பூசி, மா தூவிய கேக் தட்டில் ஊற்றவும்.
- 350 பாகை பரனைற்றில் சூடாக்கிய அவனில் 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.
- நன்றாக ஆறியதும் ஐசிங் பவுடர் தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment