Ajantha Cakes will reflect your taste and style.There are so many ways of making cakes using different recipes, ingredients and flavors. I design all kind of cakes and can recreate any object may find interesting into beautiful cakes to celebrate all occasions.
முட்டை வெண்கருவைத் தனியாக எடுத்து, கேக் அடிக்கும் மெசினில், முட்டை அடிக்கும் (whisk attachment) கருவியினால் நன்கு நுரை வரும்வரை அடிக்கவும், கரண்டியால் அள்ளும்போது கெட்டியாக இருக்க வேண்டும், வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
கேக் அடிக்கும் கருவியில் துடுப்பு இணைப்பைப் பொருத்தி (Flat beater /paddle attachment) பட்டரையும், சீனியையும் நன்கு அடிக்கவும், சீனி நன்கு கரைய வேண்டும்,அத்துடன் பட்டர் வெள்ளை நிறமாகவும் வரும்வரை அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த பேரீச்சம் பழம், கஜு சேர்த்து கலந்து பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
ஓவனை நடுத்தர சூட்டில் வைத்து 375°F (180°C) க்கு சூடாக்கவும்.
பேக்கிங் பான்களை பட்டர் பூசி பேக்கிங் பேப்பர் போட்டு வைக்கவும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை துண்டுகளாக வெட்டி, கொதி நீரில் ஊறவைத்து, நன்றாக ஆறி மென்மையாகும்வரை 1 மணித்தியாலம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் மா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக அரித்து வைக்கவும்.
தாச்சியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 1 தேக்கரண்டி பட்டரில் ரவையை பொன்னிறமாகும்வரை வறுத்து ஆறவிடவும்.
முட்டைகளை வெள்ளைக்கரு வேறாகவும், மஞ்சள் கருவை வேறாகவும் வெவ்வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
கேக் அடிக்கும் மிக்ஸரில் கிண்ணத்தில் (stand mixture bowl/hand mixture) முட்டை வெள்ளைக்கருவை போட்டு, முட்டை அடிக்கும் கருவியைப் (whisk attachment) பொருத்தி நன்றாக நுரை வரும்வரை அடிக்கவும். கரண்டியால் அள்ளும்போது கட்டியாக இருக்க வேண்டும், அடித்த முட்டை வெள்ளைக்கருவை மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
கேக் அடிக்கும் மிக்ஸரில் வெண்ணெய் அடிக்கும் இணைப்பை (paddle attachment) பொருத்தி வெண்ணெய் மற்றும் சீனியைச் சேர்த்து, நடுத்தர அதிவேகத்தில் அடிக்கவும்,
பட்டர் கலவை வெளிறிய வெள்ளை மற்றும் மென்மையாக மாறும் வரை சுமார் 3 - 5 நிமிடங்கள் அடிக்க வேண்டும்.
மிக்சியின் வேகத்தைக் குறைத்து மா கலவை, முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் முட்டையின் மஞ்சள் கரு என்பவற்றை மாறி மாறி வெண்ணெய் கலவையில் சேர்க்கவும்.
ஓரங்களை வழித்து ஒன்று சேர்த்து அடிக்கவும்.
ஒரு ரப்பர் ஸ்பேட்டூலா அல்லது மர கரண்டியால், பாத்திரத்தின் பக்கங்களிலும் கீழும் பட் டர் கலவையை ஒன்று சேர்த்து அடிக்கவும்.
கேக் அடிக்கும் கருவியை குறைந்த வேகத்தில் வைத்து, வறுத்த ரவா, முந்திரி மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
No comments:
Post a Comment