Monday, June 26, 2017

மைக்கிரோவேவில் ஓட்ஸ் - வாழைப்பழ கேக் செய்யும் முறை

 மைக்கிரோவேவில் ஓட்ஸ் - வாழைப்பழ கேக் செய்யும் முறை 

மூன்று நிமிடங்களில் இலகுவில் பேக் பண்ணக்கூடிய கேக்  நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். ஓட்ஸ், வாழைப்பழம் இருந்தாலே போதும். மாலை நேர தேநீருடன் பரிமாறலாம்.


தேவையான பொருட்கள்:

  • 1/2 கப்  ஓட்ஸ் (old-fashioned rolled  oats)
  • 10 பிளம்ஸ் 
  • 1 முட்டை 
  • 1/2 கப் பால் 
  • 1/3 சிறு துண்டுகளாக வெட்டிய வாழைப்பழம் 
  • 1/4 தேக்கரண்டி கறுவா பவுடர் 
  • 1 தேக்கரண்டி சர்க்கரை/மேபிள் சிறப் 
  • 1/3 கப் அவுரிநெல்லி (blueberry)
செய்முறை:
  1. மைக்கிரோ அவனில் வைக்கக்கூடிய பாத்திரத்திற்கு சிறிதளவு பட்டர் பூசி, அதனுள் அவுரிநெல்லி (blueberry) தவிர்ந்த ஏனைய பொருட்களை முள்ளுக்கரண்டியினால் நன்கு கலக்கவும்.
  2. பின்னர் அவுரிநெல்லியை  (blueberry) போட்டு மெதுவாக கலக்கவும்.
  3.  மைக்கிரோ அவனில்இரண்டு நிமிடங்கள் வைத்து, வேகியாத எனப் பார்க்கவும். வேகாவிடில் திரும்பவும் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
  4.  ஓட்ஸ் - வாழைப்பழ கேக் தயார்.

No comments: