Friday, March 21, 2014

கரட் கேக்


தேவையான பொருட்கள்:
துருவிய கரட்                      200 கிராம்
அரைத்த பாதாம் பருப்பு  200 கிராம் 
பட்டர்                                     150 கிராம்
சீனி                                          180 கிராம் 
மா                                              50 கிராம் 
பேக்கிங் பவுடர்                   1/2 தே .கரண்டி
கறுவா பவுடர்                       2   தே .கரண்டி
முட்டை                                  2
ஐசிங் பவுடர்                         அலங்கரிக்க

செய்முறை:
     முதலில் பட்டர், சீனி இரண்டையும் நன்றாக அடிக்கவும். பின் முட்டைடையும்  சேர்த்து அடிக்கவும். பின் மாவையும், பேக்கிங் பவுடரையும் நன்றாக சலித்து வைக்கவும்.  பின் துருவிய கரட், பாதாம் பருப்பு, கறுவா பவுடர் என்பவற்றைச் சேர்க்கவும்.  அதன் பின் பட்டர் பூசி, மா தூவிய கேக் தட்டில் ஊற்றவும்.350 பாகை பரனைற்றில் சூடாக்கிய அவனில் 30 நிமிடங்கள் பேக் பண்ணவும். நன்றாக ஆறியதும் ஐசிங் பவுடர் தூவி பரிமாறவும்.

No comments: